Vaanavil Poonga Week - 6

        Vaanavil Poonga 🌈

    

1. ATM -  Articles, Tales and Morals 

        by E-Smart 







இந்த வாரம், நாம்

 "மனம் விரும்புதே என்னை"என்ற கட்டுரையை காண்போம்




                         மனம் விரும்புதே என்னை


முன்னுரை:




உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?

உங்களைப் பற்றி நீங்கள் என்ன தெரிஞ்சிகிட்டீங்க?

“என்னைப் பற்றி எனக்கு தெரியாதான்னு” - நீங்கள் கேப்பீங்க, சரி.


நீங்க எந்த அளவுக்கு உங்களைப் பற்றி தெரிஞ்சு வச்சிருக்கீங்கன்னு ஒரு

10 வரிகள் சொல்லுங்க பாக்கலாம்.



என் தன்மையை எழுதலாம்….


என் வீடுதான் எனக்கு உலகம், என் கூட குழந்தைகளை நல்லாவே நான்

பாத்துப்பேன், நானும் என் கணவரும் நல்ல புரிதல் உள்ள தம்பதிகள்,

அப்பப்ப சண்டை போட்டுக்குவோம், ஆனா! அதே சமயத்துல விட்டுக்கொடுத்தும் போயிடுவோம்.


என்னோட அப்பா அம்மாக்கு நான் ஒரு நல்ல பொண்ணு, என் கூட

பிறந்தவங்களோட, நான் நல்ல புரிதலுடன் இருப்பேன். சின்ன சின்ன

மனஸ்தாபம் வந்தாலும் நாங்க அதை பெரிசு பண்ணமாட்டோம்.



அதே மாதிரி, எனக்கு நல்ல நண்பர்கள் இருக்காங்க, அவங்க கூட என்னோட

நேரத்தை நான் நல்ல விதமா செலவிடுவேன். அக்கம் பக்கத்துல

உள்ளவங்களோட நான் சுமூகமாக இருப்பேன் இப்படியும் எழுதலாம்.


புத்தகங்கள் படிப்பது, பார்த்து பார்த்து சமைக்கிறது, நல்ல

உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது, கண்ணியமாக ஆடை அணியறது,

என்னோட குடும்பத்தோட ஒரு சின்ன பயணம் போகறது,

நண்பர்களோட ஒன்று சேர்வது இப்படி நிறைய விஷயங்களை எழுதலாம்.


வேலைக்கு போறவங்களோ, இல்ல ஒரு தொழில் செய்யறவங்களா

இருந்தா, அதுக்கு நீங்க எப்படி உங்களை தயார்படுத்திக்கிறீங்க, எந்த

அளவுக்கு ஈடுபடுறீங்க, என்னென்ன முயற்சிகளை செய்யறீங்க

அப்படின்னும் எழுதலாம்.





அதோட,


வாழ்க்கையில எந்த அளவுக்கு சாதிச்சு இருக்கேன், இனிமே எப்படி

சாதிக்கப்போறேன், இப்ப நான் செஞ்சுட்டு இருக்குற விஷயங்கள

சாதிக்க என்ன முயற்சி எடுத்துட்டு இருக்கேன்னு பற்றியும்

எழுதலாம்.


என்னால எந்த சவாலையும் ஏத்துக்க முடியும், அதற்கான மன தைரியம்

என் கிட்ட இருக்கு. சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி சரியான முடிவுகளை

நான் எடுப்பேன்.


10 பேரை வழிநடத்திக்கொண்டு போற அளவுக்கு எனக்கு திறமை இருக்கு.

குடும்பம் - வேலை (தொழில்) இரண்டையும் சமநிலையில எடுத்துக்கிட்டு

போற அளவுக்கு நேரத்தை சிறப்பா கொண்டு போவேன்.


புதுமையான யோசனைகளால் என்னோட தொழிலை, மேன்மேலும்

முன்னேற்றுவேன். நான் உழைப்பை ரொம்ப நேசிக்கிறவ, கடின

உழைப்பாளி, மற்றவர்களுக்கு நான் ஒரு முன்மாதிரியா இருப்பேன்

அப்படின்னும் பெருமையா எழுதலாம்.


தினமும், நான் செய்கிற செயல்களில் இருந்து தவறுகளை கண்டறிந்து

அதை திருத்திப்பேன். என்னோட உடல், மனம் இரண்டையும் நான்

எப்பவுமே நல்ல முறையில் பராமரிப்பேன், அதுக்கான நேரத்தை நான்

எப்படி செலவிடுறேன், அப்படிங்கறத பற்றியும், நான் ரொம்ப

தைரியமாகவும் தெளிவாகவும் பேசுவேன்.


என்னோட சிந்தனை, அறிவு, திறமை, என்னோட பழக்கவழக்கங்கள

நான் எப்படி மேம்படுத்துவேன், வாழ்க்கை தரத்தை எப்படி படிப்படியா

மேல் உயர்த்திக்கொண்டு போவேன், அப்படிங்கறத பற்றியும் எழுதலாம்.


அப்படி இல்லனா,


“எனக்கு பிடிக்கலன்னா பிடிக்கல”

“எனக்கு கொஞ்சம் கோபம் வரும்”

நான் ரொம்பவும் கண்டிப்பானவ,

இந்த மாதிரி பழக்கங்கள் இருக்கறதால கூட, எனக்கு சில நல்ல

விஷயங்களும் நடந்திருக்கு, சில தவறியும் போயிருக்குன்னும்

எழுதலாம்.





நான் தினமும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட நன்றி சொல்லுவேன்.

உதாரணமா சொல்லணும்னா,


அம்மா சமைச்சு கொடுக்குற சாப்பாட்டுக்கு, ஆசிரியர் சொல்லி

கொடுக்குற பாடத்துக்கு, நமக்கு சின்ன சின்ன உதவி பண்ற நம்மளோட

நண்பர்களுக்கும் கூட, அவ்வளவு ஏன் நம்ம சுவாசிக்கிற காற்றுக்கும்

குடிக்கிற தண்ணீருக்கும் கூட நான் நன்றி சொல்றத நல்ல குணமா

நினைக்கிறேன்.


நான் ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன், ஒவ்வொரு நாளும் புதிய

வாய்ப்பு கிடைக்குது, அதுக்கு நான் நன்றி சொல்லுவேன்.

அப்படின்னு எழுதுங்களேன்.


ஒரு காகிதத்துல குறைந்தது 10 வரிகள் எழுதுங்க,

“நான் என்ன பற்றி பெருமைப்படுகிறேன் ஏனெனில்...”

அப்படின்னு எழுதி, அதை சத்தமாகவோ, இல்ல மனசுக்குள்ளேயோ,

படிங்க.


அது மட்டும் இல்லங்க அந்த காரணங்கள தினமும் நினைவில்

வைத்துக்கொள்ளும் போது, அதன் நற் பேராற்றல் பன்மடங்காக

பெருகுகிறது.


முடிவுரை:


இது மாதிரியான சின்ன சின்ன முயற்சி, சிறு சிறு விஷயங்கள்

புரிஞ்சிகிட்டு, உங்களை நீங்க தனித்துவமான பெண்ணாக

காட்டுவதற்கு துணைசெய்யுது.


உங்களைப் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கிட்டு சுய அன்பு வளர்த்துக்கொள்ள

இது ஒரு சிறந்த வழி.

2. AM - Art Makers  

 by E-Smart









Veshmitha 
Grade - 7
Adhiyaman Public School 
Uthangarai






    3. PIN - Picture it Now 

               by E-Smart



PANDA









4. DIY - Do it Yourself 

   By E-Smart



Tissue Rabbit

Let's Gather : 🌸

  • Tissue 
  • Rubber band 
  • Marker


















5. QR - Questions and Responses 




📚How can I balance my family responsibilities and career?

Sowmiya , Trichy




  1. Plan your day and set clear priorities.
  2. Share responsibilities with your family.
  3. Set aside some quality time for your family.
  4. Avoid trying to do everything perfectly.
  5. Make time for yourself and your personal growth.


                                                                                                       - Rekha Ravikumar
                                                                                                          E-Smart

6. WWW - Weekly Worksheet Waves 

           by E-Smart






























Answer Keys : 
































Follow us on : 

Facebook     Instagram    Google    Youtube  

Visit  : 



                                                                                                                      - Rekha Ravikumar 
                           E-Smart 
                           Feel Good 
                           JoinEsmart 
                           Vaanavil Poonga 











Comments

Popular posts from this blog

Vaanavil Poonga Week - 1

Vaanavil Poonga Week -5

Vaanavil Poonga Week - 3