Vaanavil Poonga Week - 3

     Vaanavil Poonga 🌈

    

1. ATM -  Articles, Tales and Morals 

        by E-Smart 





இந்த வாரம் "சிறிய மாற்றம் பெரிய வெற்றி" என்ற கட்டுரையை காண்போம்.




சிறிய மாற்றம் - பெரிய வெற்றி




முன்னுரை:

சிறிய மாற்றம் பெரிய வெற்றிகளை கொடுக்குமா?

அதற்கான பதில் – ஆம்.

நம் தினசரி பழக்க வழக்கங்கள், படிக்கும் உத்திகளை சின்ன சின்ன மாற்றம் செய்து, சரியான பயிற்சிகளை பின்பற்றினால், நிச்சயமாக வெற்றி எனும் இலக்கை அடைய முடியும். அதற்கான சில எளிய குறிப்புகளை இங்கு பார்ப்போம்.

மாணவர்கள் படிக்கும் இடத்தின் சூழல்:

• மாணவர்கள் முதலில் தாங்கள் படிப்பதற்கு ஏற்ற நல்ல சூழல் உள்ள இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்

• ஒரே இடத்தில் தினமும் படிக்கும் போது நல்ல சௌகரியமாக படிக்க முடியும்




• அந்த இடம் அமைதியான இடமாகவும், காற்றோட்டமாகவும் இருக்கும்போது, அவர்கள் கவனம் சிதறாமல் படிக்க முடியும். மனமும் திறனும் புத்துணர்ச்சி பெறலாம்

• நல்ல ஒளியுடன் இருக்கும் இடமாகவும், ஒளி அவர்களின் பின்புறத்தில் இருந்தும் வர வேண்டும்

• இதனால் அவர்கள் கண்கள் சோர்வடையாமல் இருக்கும். தலைவலி போன்ற பிரச்சனைகளும் வராது

• படிப்பதற்கு ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து உங்கள் குடும்பத்தினரிடம் தெரிவியுங்கள். இதனால் பிற குறுக்கீடுகள் இல்லாமலும் படிக்க இயலும்.

• நீங்கள் படிக்கும் இடத்தில் புத்தகங்கள் தவிர மற்ற பொருட்கள் இருந்தால், அதற்கான உரிய இடத்தில் வைத்து விடுங்கள். இதனால் உங்கள் கவனம் சிதறாமல் படிக்க முடியும்

• படிக்கும் மேசையில் படிப்பதற்கு தேவையான புத்தகங்கள், நோட்டுகள், பேனா, பென்சில் மற்றும் படிப்பதற்கு தேவையான பொருட்கள் மட்டும் வைத்திருப்பது நல்லது


   தினசரி படிப்பு திட்டம் :

• நீங்கள் உங்கள் பள்ளி அட்டவணைப்படி நோட்டுகள், புத்தகங்கள், மற்றும் தேவையான உபகரணங்கள் (Geometry box, Colour pencils, sketch) அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு படிக்க அமரவும்

• பாடங்கள் படிப்பதற்கு அட்டவணை போட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கு சுலபமான பாடத்திற்கு குறைவான நேரத்தையும், கடினமான பாடத்திற்கு சற்று அதிக நேரத்தையும் ஒதுக்குங்கள். இத்திட்டத்தை கண்டிப்பாக பின்பற்ற முயலுங்கள்




• 30 நிமிடம் கவனம் சிதறாமல் படித்தால், 5 நிமிடம் இடைவேளை எடுத்துக் கொள்ளலாம். இந்த ஐந்து நிமிட இடைவேளையில், நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுந்து சென்று தண்ணீர் அல்லது பழச்சாறு அருந்தலாம், அல்லது சிறிது நடக்கலாம். இதனால் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்

• மறுநாள் அட்டவணைப்படி, முதல் நாள் இரவே நோட்டுகள், புத்தகங்கள் மற்றும் தேவையான உபகரணங்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

படிப்பதற்கான எளிய முறைகள்:

• அனைத்து பாடங்களிலும் உள்ள முக்கியமான தலைப்புகளை குறிப்பெடுக்கலாம். குறிப்பு எடுக்கும் போது, வண்ண பேனாக்களை பயன்படுத்தி குறிப்பிட்டால், படிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும்

• பதில்களை பத்தி பத்தியாக எழுதாமல் புள்ளிவிவரமாக எழுதுவது சிறந்தது. பதில்களை எழுதி பார்த்து பயிற்சி செய்வது சிறப்பு

• உங்கள் அறிவியல் பாடங்களில் உள்ள படங்களை வரைபடமாக வரைந்து, பாகங்களை குறித்து, நீங்கள் படிக்கும் அறையின் சுவற்றில் ஒட்டலாம். கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களில் உள்ள சூத்திரங்களை (Formula) எழுதி சுவற்றில் ஒட்டிக் கொள்ளலாம். அதனை தினமும் பார்க்கும்போது மனதில் நன்றாக பதியும்




• முக்கியமான பாடங்களுக்கு Mind map, Concept map, மற்றும் Flashcards தயாரிக்கலாம்

• பாட அட்டவணையை வண்ண பேனாக்களில் எழுதி சுவற்றில் ஒட்டிக் கொள்ளலாம். ஒவ்வொரு பாடமும் முடிந்த பிறகு பென்சிலால் “Tick” செய்வது உங்களுக்கு உந்துதலாக இருக்கும்    

தேர்வு கால பயிற்சி:

• தேர்வுக்கான அட்டவணை வந்தவுடன், நீங்கள் தேர்வுக்கு படிப்பதற்கான அட்டவணையை எழுதுங்கள். தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே, பாடப்பகுதியை (Syllabus) முடித்துவிட்டு, Revision செய்ய தொடங்குங்கள்

• அனைத்து பாடங்களிலும் உள்ள முக்கிய கேள்விகளை எழுதி, அதற்கு சற்று அதிக கவனம் செலுத்துங்கள்

• அதிகமான பாடப் பகுதிகளாக இருந்தால், சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து படிக்கலாம். இதனால் படிப்பதில் சோர்வு ஏற்படாது

• தேர்வு நெருங்கும் நேரத்தில், புதிய பாடங்கள் அல்லது புதிய கேள்விகள் படிப்பதை தவிர்த்துவிடுங்கள்

உடல் மற்றும் மனநலம்:

• “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும்” அதுபோல் மாணவர்களான நீங்கள், உங்கள் ஆரோக்கியத்தை பேணி காத்தால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும்




• உங்கள் ஆரோக்கியத்திற்கு முதலில் போதுமான தூக்கம் தேவை (6 – 8 மணி நேரம்). தேர்வு நேரங்களில் படிக்கிறேன் என்பதற்காக, விடிய விடிய படிக்கக்கூடாது. இரவு நேரங்களில் சிறிது நேரம் படித்து விட்டு தூங்குங்கள், பிறகு அதிகாலை எழுந்து படிப்பது சிறந்தது

• ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், துரித உணவுகளை தவிருங்கள், தினமும் 2 - 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள்

• தினமும் 5 நிமிடம் தியான பயிற்சி செய்யலாம். இது உங்கள் கவனச்சிதறலை தவிர்க்க உதவும்







🌈 வாசித்ததற்கு நன்றி!


                                                       

2. AM - Art in Meals  

 by E-Smart




🥗 ஆரோக்கியமான சிற்றுண்டி செய்முறை

🥕 காய்கறி ஓட்ஸ் கட்லெட் – ஆரோக்கியமான சிற்றுண்டி

 தேவையான பொருட்கள் : 

  • ஓட்ஸ் – 1 கப்
  • வேகவைத்த உருளைக்கிழங்கு – 1
  • கேரட் – ½ கப்
  • பீன்ஸ் – ¼ கப்
  • பச்சைப் பட்டாணி – ¼ கப்
  • வெங்காயம் – 1 சிறியது
  • பச்சை மிளகாய் – 1
  • இஞ்சி – சிறிதளவு
  • மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
  • சீரகத்தூள் – ½ தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

👩‍🍳 செய்முறை : 

  1. ஓட்ஸை லேசாக வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  2. கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணியை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, காய்கறிகள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
  4. அதனுடன் ஓட்ஸ் பொடி, மிளகாய்த்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
  5. சிறிய உருண்டைகளாக செய்து கட்லெட் வடிவில் தட்டையாக தட்டவும்.
  6. தோசைக்கல்லை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் தடவி, கட்லெட்டுகளை இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.
  7. சூடாக பரிமாறவும். 😋







  •  ஆரோக்கியக் குறிப்பு:
    எண்ணெயில் பொரிப்பதற்கு பதிலாக தோசைக்கல்லில் குறைந்த எண்ணெயுடன் சுட்டெடுத்தால் இது இன்னும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும்.
  •                         

        3. PIN - Picture it Now 

                   by E-Smart


























    4. DIY - Do it Yourself 

       By E-Smart

    Paper cup Tiger : 

      Let's Gather :
         * Paper cup
         * Glue 
         * Water colour
         * Colour Paper 
         * Sketch 






















    5. QR - Questions and Responses 




    📚 என் குழந்தையின் கவனத்தை அதிகரிக்க நான் என்ன செய்யலாம்?
     G. Abirami , Salem




    1. 📚 அமைதியான படிப்பு சூழலை உருவாக்குங்கள் – தொலைக்காட்சி, கைபேசி போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்த்து அமைதியான இடத்தில் படிக்கச் செய்யுங்கள்.
    2. ⏰  20–30 நிமிடங்கள் கவனமாக படிக்க வைத்து, சிறிய இடைவேளை கொடுங்கள்.
    3. 📝 ஒரு தினசரி அட்டவணை அமையுங்கள்  – படிப்பு, விளையாட்டு, ஓய்வு என நேரத்தை திட்டமிட்டு செயல்படச் செய்யுங்கள்.
    4. 🧩 கவனத்தை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுத்துங்கள் – புதிர்கள், நினைவாற்றல் விளையாட்டுகள், வரைதல் போன்ற செயல்களைச் செய்ய ஊக்குவியுங்கள்.
    5. ❤️ அன்புடன் ஊக்கப்படுத்துங்கள் – குழந்தை சிறிய முயற்சி செய்தாலும் பாராட்டுங்கள். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவதைத் தவிருங்கள்.



                                                                                                           - Rekha Ravikumar
                                                                                                              E-Smart

    6. WWW - Weekly Worksheet Waves 

               by E-Smart



















    Follow us on : 

    Facebook     Instagram    Google    Youtube  

    Visit  : 



                                                                                                                          - Rekha Ravikumar 
                               E-Smart 
                               Feel Good 
                               JoinEsmart 
                               Vaanavil Poonga 









    Comments

    Popular posts from this blog

    Vaanavil Poonga Week - 1

    Vaanavil Poonga Week -5